Thursday, February 02, 2017


தினம் ஒரு கவிதை 
எழுதுவதே 
பெரும்பாடு எனக்கு !! 

நீயோ நொடிக்கொன்று 
புனைகிறாய் அநாயாசமாக 

தலையை ஒரு சாய்க்கையிலே,
கண்களை சிறிது இறுக்ககையிலே,
அந்த கள்ளச் சிரிப்பினிலே.. 

இது போல் இன்னும் பல. 
அப்ப்பப்பா முடியல .. 

#பெண் குழந்தை

Tuesday, March 29, 2005

நினைவுகள்..

எங்கோ ஒரு மூலையில்
இருவரும்

மறக்காமல் நினைத்துக்
கொண்டார்கள் -

அவள் மறந்திருப்பாள்
என அவனும்

அவன் மறந்திருப்பான்
என அவளும் !!

Monday, February 07, 2005

கேள்வி!!

எங்கே போகிறாய் என்றேன்
ஒரே நொடி என்றாய்;
கண் பொத்தி
முத்தமிட்டு சென்றாய்
தென்றலாய் ..


எங்கே போகிறாய் என்றாய்
ஒரே நிமிடம் என்றேன்;
சிரித்து எழுந்து
ஜன்னல் திறந்தேன்
நீ சூரியன் பார்க்க ..

எங்கே போகிறாய் என்றேன்
ஒரே நாள் என்றாய்;
பிறந்த நாள்
பரிசளித்தாய் விரும்பிய
காஞ்சி பட்டை ..

எங்கே போகிறாய் என்றாய்
ஒரே மாதம் என்றேன்;
தனியாய் சென்று
துணையோடு வந்தேன்
தாய் வீட்டிலிருந்து ..

எங்கே போகிறாய் என்றேன்
ஒரே வருடம் என்றாய்;
கனத்தது -
போகையில் மனமும்
வருகையில் பணமும் ..

இம்முறை ஒரே ஜென்மம்
என்று சொல்ல முடியாமல் நான்

எங்கே போகிறாய்
என்று கேட்க முடியாமல் நீ !!



Saturday, February 05, 2005

அறுசுவை!!

பாலோடு சர்க்கரை
கலக்கும் போது
ஞானம் பிறந்தது
உணவும் உறவும் ஒன்றென்று..

என்றும் எதிலும் தேவைப்படும்
அளவான உப்பாய் சில உறவுகள்..

அன்றாடம் சுவை கூட்டும்
சர்க்கரையாய் சில உறவுகள்..

கசக்கும் பாகற்காயை இருந்தும்
மனதிற்கு இதமாய் சில உறவுகள்..

நினைத்தாலே அன்பு ஊறும்
சில உறவுகள்..

வார்த்தை தீயில்
ருசி மாறி விடும் சில உறவுகள்..

தித்தித்த அன்பால்
திகட்டும் சில உறவுகள்..

இனிமேல்
வெறுக்க போவதில்லை
யாரையும் - வாழ்க்கையும்
இருந்துவிட்டு போகட்டும்
சரிவிகித உணவாய்..